கிண்ணியா அஸ் ஸபா வித்தியாலய மாணவன் வரலாற்று சாதனை

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்ட வரலாற்றில் முதன் முறையாக பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட 18 வயதின் கீழ் டைகொட்டோ (Taekwondo) போட்டியில் கிண்ணியா அஸ் ஸபா வித்தியாலய மாணவன் எம்.எம்.றிப்னாஸ் என்பவர் 3 ஆம் இடத்தை பெற்று கிண்ணியா மண்ணிற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவ் வெற்றியானது இப் போட்டி நிகழ்ச்சியில் திருகோணமலை மாவட்டத்தில் கிடைத்த முதல் வரலாற்று வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது.