கிண்ணியாவில் காய்த்து குழுங்கும் மாதுளம் பழங்கள்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட வட்டமடு பகுதியில் மாதுளை தோட்ட செய்கை வெற்றியளித்துள்ளது.

குறித்த மாதுளை தோட்ட செய்கையை அதிகளவான பொது மக்கள் பார்வையிட்டு வருவதுடன் கொள்வனவிலும் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் ஒருவரின் முயற்சியினால் இவ் மாதுளை தோட்டச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஒரு கிலோ 1500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டும் வருகிறது.

மாதுளை தோட்டச் செய்கை கிண்ணியா வரலாற்றில் முதல் வெற்றியாக கருதப்படுகிறது. வட்டமடு பகுதியில் ஏனைய சேனை பயிர்ச் செய்கை பலராலும் மேற்கொள்ளப்பட்டாலும் விசேடமாக மாதுளை செய்கை ஒரு புது விதமான உற்பத்தி செய்கையாக பார்க்கப்படுகிறது. பல மருத்துவ நற்குணங்களை கொண்ட மாதுளை பழங்களுக்கு அதிக கிராக்கியாகவும் காணப்படுகிறது.

மக்களின் பார்வையில் அதிக வரவேற்பை பெற்று விளங்குவதுடன் விசேடமாக அதிக பார்வையாளர்களை கிண்ணியா மாதுளை தோட்டம் ஈர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்