கிண்ணியாவில் இரு நூல்கள் வெளியீடு

-கிண்ணியா நிருபர்-

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் கிண்ணியா எழுத்தாளர் ஏ.எம்.கஸ்புள்ளா எழுதிய ‘பாரம்பரிய சீனடி தற்காப்புக்கலை’பற்றிய ஒரு நோக்கியல் எனும் ஆய்வு நூல் மற்றும்’இலங்கை கல்வியமைச்சினால் அங்கீகாரம் பெற்ற ‘அணில் சொல்லிய பாடம்’ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு நேற்று சனிக்கிழமை கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கலாநிதியும் ஓய்வு நிலை அதிபருமான எஸ்.ஞானராசா தலைமையில் நடை பெற்றது.

கிண்ணியா பிரதேச செயலக கலாசார அதிகார சபை மற்றும் முன்னோடிகள் கலை இலக்கிய வட்டம் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் எம்.எஸ்.சிராஜுதீன் ஆசிரியர் வரவேற்புரையையும், ஓய்வு பெற்ற அதிபரும் கலாநிதியுமான எஸ்.ஞானராசா தலைமையுரையையும், ஏ.டபிள்யூ.முஹ்சின் நூலின் ஆய்வுரையையும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி பிரதம அதிதியாக கலந்து கொண்டு நூலின் முதல் பிரதியை புகையிரத திணைக்களத்தின் கிழக்கு மாகாண வேலைத்தள மேற்பார்வை ஓய்வு நிலை முகாமையாளர் ஏ.ஏ.மஹரூப்  பெற்றுக்கொண்டதுடன் ,கிழக்கு மாகாண கல்வியமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஸீ.எம்.முஸ்இல் ஏனைய பிரமுகர்களுக்கும் நூலின் பிரதிகளை இதன் போது வழங்கி வைத்தனர்.

தற்காப்புக் கலையான சீனடியை பயிற்றுவித்த ஏழு அன்னாவிகள் இதன்போது பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பட்டனர்.

இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி பிரதம அதிதியாகவும்,கிழக்கு மாகாண கல்வியமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஸீ.எம்.முஸ்இல் விசேட அதிதியாகவும்,சீனடி பயிற்றுவித்த அன்னாவிகள், அதிபர்கள்,ஆசிரியர்கள்,எழுத்தாளர்கள்,இலக்கிய ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.