
கிண்ணியாவில் அரிசி பொதிகள் வழங்கி வைப்பு
-கிண்ணியா நிருபர்-
அரசாங்கத்தின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி வழங்கும் திட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் இன்று செவ்வாய் கிழமை இடம்பெற்றது.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். ஹனி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல். எம் அதாவுல்லா கலந்து கொண்டு அரிசி பொதிகளை வழங்கி வைத்தார். 10 கிலோ கிராம் எடை கொண்ட அரிசி பொதி யானது ஒவ்வொரு குடும்பங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இதில் 220 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
சஜீத் அனுர குமார விவாதம் தொடர்பில் கிண்ணியாவில் இன்று இடம் பெற்ற நிகழ்வின் பின் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்த திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுள்ளா விவாதத்தை யாரும் நடத்தலாம் அரசியலுக்காக விரும்பினால் அதை செய்யலாம் என்றும் ஜனாதிபதி தற்போது ரணில் விக்ரமசிங்க உள்ளார் அவரே பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்டுள்ளார் இனி பிரதம அமைச்சர் தெரிவு பற்றி அதனை மக்களை தெரிவு செய்வர் என்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
