
கால் தடுக்கி கீழே விழப் பார்த்த டொனால்ட் ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிவ் ஜர்சியில் அமைந்துள்ள மொரிஸ்டவுன் நகராட்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்வதற்காக எயார் போர்ஸ் 1 விமானத்தில் ஏறும்போது கால் தடுக்கி கீழே விழச் சென்றார்.
இந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இதற்கிடையில், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் அந்த விமானத்தில் ஏறும்போது கால் தடுக்கி விழச் சென்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.