கால்வாயில் வீழ்ந்து பெண் உயிரிழப்பு

தெமட்டகொட காலிபுலவத்தை பகுதியில் பெண் ஒருவர் கால்வாயொன்றில் விழுந்து நேற்று செவ்வாய் கிழமை உயிரிழந்துள்ளார்.

74 வயதான குறித்த பெண் கால்வாய்க்கு அருகாமையில் உள்ள மரத்தில் பூ பறித்துக் கொண்டிருந்த போதே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தெமட்டகொடபொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்