காலி பகுதியில் துப்பாக்கிச் சூடு
காலி, ஹக்மீமன, வெவேகொடவத்த பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டின் உரிமையாளர் மிதிகம பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நிர்வாகியாகப் பணியாற்றி வருகிறார், மேலும் சில நாட்களுக்கு முன்பு ஊழியருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த ஊழியர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.
குறித்த ஊழியர் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு அவரை அச்சுறுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, துப்பாக்கிச் சூட்டை அந்த நபர் நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.