காற்று மாசுபாடு தடுக்கும் முறைகள்
🟡நாம் வாழும் பூமி நிலம், நீர், காற்று போன்றவற்றால் உருவானது. எல்லா உயிரினங்களும் வாழ்வதற்கு இவை மிகவும் அவசியமானவை. மனிதன் உயிர்வாழ அடிப்படையானது காற்றாகும்.
🟡காற்றானது வளி என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றது. எம் உயிர் வாழ்க்கைக்கு காற்றானது முக்கியமானதாக விளங்குகின்றது. இறைவனின் இயற்கைப் படைப்புகளில் அற்புதமான படைப்பு காற்றாகும்.
🟡ஜூன் 15ம் திகதி உலக காற்று தினம் உலக மக்களால் கொண்டாடப்படுகின்றது. உயிர் வாழ்வதற்கு இன்றியமையாததாகக் காணப்படும் காற்றானது இன்று பல வழிகளிலும் மாசடைந்து வருகின்றது.
📌காற்று மாசுபாடு என்பது புகை, தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் மேலும் தூசுகளால் காற்று மாசுபடுவதாகும். முக்கியமாக அவற்றை காற்று மாசுபடுத்தி என்று அழைக்கின்றனர். காற்று மாசுபாடு தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களை கடுமையாக பாதிக்கிறது.
📌எம்மைச் சூழவுள்ள வளி பல்வேறு காரணங்களால் மாசடைகின்றது. மாசுபாடுகளில் பெரும்பாலானவை மனிதனால் உருவாக்கப்படுகின்றன. ஆனால் சில காற்று மாசுபாடு எரிமலை வெடிப்புகளிலிருந்து வரும் சாம்பல் போன்ற இயற்கைக் காரணங்களினாலும் நிகழ்கின்றன
📌மேலும் காற்றானது தொழிற்செயன்முறைகள், வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை, திறந்த வெளிக் கழிவுகள் போன்றவற்றாலும் மாசடைகின்றது. இவை மட்டுமல்லாது காட்டுத்தீ, வாகனப் பெருக்கம், தொழிற்சாலைக் கழிவுகள் ஆகியவற்றினாலும் வளி மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது இது காற்று மாசுபாட்டிற்கு வழிவகுக்கின்றது. முக்கியமாக மரங்களை வெட்டுவதால் நச்சு வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகரிக்கின்றது அதனால் காற்று மாசடைகின்றது.
📌காற்று மாசடைவானது மனிதனை நேரடியாகப் பாதிக்கும் ஓர் காரணியாக உள்ளது. அதிலும் குறிப்பாக நகர்ப்புற மக்களே அதிகம் பாதிப்படைகின்றனர். காற்று மாசுபாடு காரணமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இருதய நோய்களின் ஆபத்து அதிகமாகக் காணப்படுகிறது மற்றும் தாவரங்களையும், விலங்குகளையும் பாதிப்படையச் செய்கின்றன
📌அதுமட்டுமல்லாமல் சுவாச நோய்களான, ஆஸ்துமா, சுவாசப்புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் பாரிசவாதம் என்பனவும் ஏற்படுகின்றன.
📌எமது சூழலின் வளியின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வாகன நெரிசல்கள் இல்லாத பாதைகளைப் பயன்படுத்த வேண்டும். குறைவான தூரங்களிற்குச் செல்லும் போது நடந்தோ அல்லது சைக்கிள் மூலமோ செல்ல வேண்டும்.
📌அதிக புகை வரும் வாகனங்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் சூழலில் வளி மாசடையும் அளவினைக் கண்காணித்தல் வேண்டும்.
📌வளி மாசடைதலானது பாரியதொரு சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எனவே இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு அவசியமானதாகும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வாகனங்களைத் தடை செய்ய வேண்டும்.
📌மேலும், காற்றினைத் தூய்மைப்படுத்துவதில் தாவரங்கள் பெரும் பங்காற்றுகின்றன. தாவரங்களானவை காபனீரொட்சைட் போன்ற கெடுதியான வாயுவை உறிஞ்சக் கூடியனவாகும். எனவே காடழிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும். அதேவேளை அதிகளவான மரங்களை நட வேண்டும்.
📌காற்று மாசுபாடானது இன்று உலகளாவிய பிரச்சினையாக மாறிவிட்டது. எனவே இந்த பிரச்சினையைத் தீர்ப்பதில் அனைவரது பங்களிப்பும் அவசியம். எனவே இயற்கையை நாம் பாதுகாப்போம் இயற்கை எம்மைப் பாதுகாக்கும்.
காற்று மாசுபாடு தடுக்கும் முறைகள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்