காய்ச்சலால் மாணவி உயிரிழப்பு

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் காய்ச்சல் காரணமாக மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறீரங்கநாதன் மதுமிதா (வயது – 16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 7ஆம் திகதி மாணவிக்கு இடையிடையே காய்ச்சல் ஏற்பட்டதால் நேற்றுமுன்தினம் காலை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்படட நிலையில் அன்றிரவே உயிரிழந்துள்ளார்.

திடீர் மரண விசாரணை அதிகாரி பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

அதேசமயம் இறப்பிற்கான காரணத்தை கண்டறிவதற்காக உடற்கூற்று மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்