காத்தான்குடி போன்ற பகுதிகளில் அதிகரிக்கும் துரித உணவு கடைகள் நீரிழிவு நோயாளர்களை அதிகரிக்கின்றது

முன்னர் எல்லாம் பிள்ளைகள் பெற்றோரின் மரணத்தை பார்த்தார்கள் ஆனால் இந்த தலைமுறையில் தான் பெற்றோர் பிள்ளைகளின் மரணத்தை பார்க்கும் துயரமான நிலை உருவாகியுள்ளதாக, நீரிழிவு மற்றும் அகஞ்சுரப்பி விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தர்ஷினி கருப்பையாபிள்ளை தெரிவித்துள்ளார்.

மின்னல்24 செய்திசேவைக்கு இன்று சனிக்கிழமை வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் காத்தான்குடி போன்ற பகுதிகளில் துரித உணவு கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது, அதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகம் காபோவைதறேற்று உள்ள உணவுகளை உண்டு, அதிகமாக நீரிழிவு நோய்க்கு ஆளாகி வருகின்றனர், என வைத்தியர் தர்ஷினி கருப்பையாபிள்ளை தெரிவித்தார்.