காத்தான்குடியில் போக்குவரத்து சட்டங்களை மீறிய 13 வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல்

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை கடற்கரை வீதி உள்ளிட்ட பல இடங்களில் காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 13 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்று   பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நடவடிக்கை, காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஆலோசனையின் கீழ், போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட  குறித்த வாகனங்களில், தலைக்கவசம் அணியாமல் செலுத்தியமை, இலக்கத் தகடுகள் இல்லாமை, உரிய ஆவணங்கள் இல்லாமை, அதிக வேகத்தில் செலுத்துதல் போன்ற முக்கியமான விதிமீறல்கள் பதிவாகியிருந்தன.

இவ்வாறு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

 

 

 

 

  • Beta

Beta feature