காதல் மனைவியை கொன்று உடல் முழுவதும் மஞ்சள் பூசி நாடகம் ஆடிய கணவன்
இந்தியாவில் காதலித்து திருமணம் செய்த பெண்ணை கொன்றுவிட்டு கணவன் நாடகமாடியுள்ளார்.
கோவை, குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது – 20). பி.காம் சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தன்னுடன் படித்து வந்த ரமணி (வயது – 20) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். சஞ்சயின் தாய் இதற்கு சம்மதம் தெரிவித்ததால் அவருடன் இருவரும் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், ரமணி சாணி பவுடர் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாக சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
அதன்பின் இவர் இறப்பில் மர்மம் இருப்பதாக பெண்ணின் பெற்றோர் தெரிவித்த நிலையில், பொலிஸார் ரமணியின் கணவர் சஞ்சய், மாமனார் லட்சுமணன், மாமியார் பக்ருநிஷா ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.
அதில், சஞ்சய் அடிக்கடி தொலைபேசியில் அவருடன் படித்த கல்லூரி மாணவியுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதை ரமணி தட்டிகேட்டு இனி அந்த பெண்ணுடன் பேச வேண்டாம் என கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் சஞ்சய், ரமணியை அடித்து கழுத்தை துப்பட்டாவால் நெரித்ததாக தெரிய வந்துள்ளது. அதில் அவர் உடனே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து சஞ்சய் தனது தாய், தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் கொலை மறைப்பதற்காக அந்த பெண்ணின் உடலில் இருந்த ஆடைகளை அகற்றி சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சளை உடல் முழுவதும் பூசி சாணிப்பவுடரை குடித்து இறந்தது போல் நாடகம் நிகழ்த்தியுள்ளனர். அயலவர்களை நம்ப வைக்க புளியை கரைத்து ஊற்றியது தெரியவந்தது.
தொடர்ந்து மூவரும் கைது செய்யப்பட்டு பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்