காதலியை குழிதோன்றி புதைத்த காதலன்
மதவாச்சி பகுதியில் காதலியை புதைத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணை கடந்த சில தினங்களாக காணவில்லை என அவரின் உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து காணாமல் போன பெண்ணின் காதலனிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைய குறித்த நபர் தனது காதலியான காணாமல் போன பெண்ணை அவரின் தோட்டத்தில் புதைத்துள்ளார் என தெரியவந்துள்ளது.
புதைக்கப்பட்ட பெண் மரணித்தமைக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்