
காதலியையும் அவரது தாயாரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு தவறான முடிவெடுத்த நபர்
யாழ்ப்பாணத்தில் காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு சந்தேகநபரும் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
இதன்போது இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பகுதியில் வசித்து வந்த குணத்திலகம் பிரணவன் (வயது – 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் இன்றையதினம் செவ்வாய் கிழமை அதிகாலை 4 மணியளவில் யுவதியின் வீட்டிற்குள் நுழைந்து குறித்த யுவதி மீதும் அவரது தாயார் மீதும் கூரிய ஆயுதத்தால் தாக்குதலை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று வெற்றுக் காணி ஒன்றில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
இந்நிலையில் யுவதியும் யுவதியின் தாயாரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
