காணி நன்கொடை

 

கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற ரீ பில்டிங் ஸ்ரீ லங்கா ‘Rebuilding Sri Lanka’ அங்குரார்ப்பண நிகழ்வில் சந்திரா குசுமாவதி எவரிட், ஜி. ரசங்க பிரகீன் பெர்னாண்டோ, பீ. நிமேஷா மதுமாதலி சிறிவர்தன மற்றும் டி.எம். சமந்த சரத் ஆனந்த ஆகியோர் காணிகளை நன்கொடையாக வழங்கினர்.

அதன்படி

* செவெந்தன, வதாகடவில் வசிக்கும் சந்திரா குசுமாவதி எவரிட், குருநாகல் அலவ்வ பகுதியில் 02 ஏக்கர் 29.5 பேர்ச்சஸ் காணியையும்,

• வேகட, பாணந்துறையைச் சேர்ந்த ஜீ.ரசங்க பிரகீன் பெர்னாண்டோ, களுத்துறை பண்டாரகம பிரதேசத்தில் 70 பேர்ச்சஸ் காணியையும்,

* குருநாகல், வேவகெதரவில் வசிக்கும் பீ. நிமேஷா மதுமாதலி சிறிவர்தன, குருநாகலை பொல்பிதிகம பகுதியில் 64 பேர்ச்சஸ் காணியையும்,

* ஹிங்குல, ஓவத்தேயைச் சேர்ந்த டி.எம். சமந்த சரத் ஆனந்த, குருநாகலை மாஸ்பொத பகுதியில் 15 பேர்ச்சஸ் காணியையும் நன்கொடையாக வழங்கினர்.