
காணாமல் போன நெற் தொகுதி : உடனடியாக அறிக்கை சமர்பிக்குமாறு ஆலோசனை
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான ஐந்து களஞ்சியசாலைகளில் இருந்து காணாமல் போன நெற் தொகுதி தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்பிக்குமாறு விவசாய அமைச்சரால் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையை 3 நாட்களுக்குள் சமர்பிக்குமாறும் பணிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான ஐந்து களஞ்சியசாலைகளில் இருந்து பல கட்டங்களாக கொள்வனவு செய்யப்பட்ட நெல் காணாமல்போனமை தொடர்பில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டுக்கமைய குறித்த அறிக்கை கோரப்பட்டுள்ளது.
