
காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு
பொலன்னறுவ, வெலிக்கந்த பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி இளைஞரொருவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
வெலிக்கந்தை பிரதேசத்தைச் சேர்ந்த வசந்த பண்டார (வயது – 28) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் இரவு வேளையில் அருகிலிருந்த காட்டுப் பகுதியில் மரம் வெட்டிக் கொண்டிருந்த போது காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக வெலிக்கந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் மீதான பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
