கதிர்காம முருக பெருமானை தரிசிப்பதற்க்கு பக்தர்கள் காட்டுப்பாதை வழியாக கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை முதல் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
லாகுகலை உகந்தை வன பாதையின் கதவானது, திறந்த போது ஆரோஹரா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது காட்டுவழிப் பயணத்தினை மேற்கொண்ட வருகின்றனர்
இதேவேளை குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதாக பாதயாத்திரை செல்லும் மக்கள் தெரிவித்தார்.
இவ்வாறான நிலை ஒருபோதும் இடம்பெறவில்லை ஆனால் இவ் முறை இடம்பெற்றதாகவும் இதற்கு பொறுப்பான அதிகாரிகள் கவனம் எடுக்கவேண்டும் எனவும் மக்கள் தெரிவித்தார்.
அத்துடன் கடந்த 20 ஆம் திகதி திறக்கப்பட்ட கதிர்காமம் காட்டுப்பாதை எதிர்வரும் 2025.07.04 அன்று மூடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.