காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் புகாவு(Bukavu) நகரில் இரண்டு பாடசாலைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீயிலிருந்து தப்பிக்க மாணவர்கள் அவசரமாக வெளியேறியபோது நெரிசல் மற்றும் மிதிபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அனர்த்தத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












