காக்கைதீவு மற்றும் சாவற்கட்டு கடற்றொழிலாளர்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

 

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம், காக்கைதீவு மற்றும் சாவற்கட்டு கடற்றொழிலாளர்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இரண்டு தரப்பினருக்கும் இடையில் அண்மைக்காலமாக நிலவிவந்த தொழில்சார் முரண்பாடுகளை தீர்த்து வைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

காக்கைதீவில் அமைந்துள்ள கடற்றொழிலாளர் இறங்குதுறை மற்றும் மீன் விற்பனை சந்தை போன்றவற்றை பகிர்ந்து கொள்வதில் முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் சுமூகமான தீர்விற்கு சம்மந்தப்பட்ட இரண்டு தரப்புக் கடற்றொழிலாளர்களும் சம்மதம் தெரிவித்த நிலையிலேயே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலக மண்டபத்தில் கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர், மானிப்பாய் பிதேச சபை செயலாளர், கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஜெ.சுதாகர், காக்கைதீவு மற்றும் சாவற்கட்டு கடற்றொழிலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்