கழிவு கால்வாயில் பாய்ந்து தப்பிக்க முயன்ற பெண் கைது

 

கொழும்பு மட்டக்குளியில் குடு ராணி என அழைக்கப்படும் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பெண் நேற்று ஞாயிற்று கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளி கதிரானவத்தை பகுதியை சேர்ந்த அன்னமலே செல்வராணி (வயது – 45) என்ற பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.

யுக்திய நடவடிக்கையின் கீழ் கதிரானவத்தை பகுதியிலுள்ள குறித்த பெண்ணின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.இதன்போது, பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற பெண் அருகிலுள்ள கழிவு கால்வாயில் பாய்ந்துள்ளார்.

பின்னர் மேலதிக பொலிஸ் அதிகாரிகள் குழு, சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த பெண்ணிடம் இருந்து 5 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதை பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்