களவாடப்பட்ட தங்கச்சங்கிலிகள் மீட்பு

-கிளிநொச்சி நிருபர்-

கடந்த மாதம் இரு வேறு திகதிகளில் களவாடப்பட்ட தங்கச் சங்கிலிகள் 2 இரண்டு புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக, குறித்த சங்கிலிகளை களவாடிய இரண்டு சந்தேக நபர்களும், தங்கச் சங்கிலியை விலைக்கு வாங்கிய இருவரும் தருமபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 4 பேரையும் இன்று நீதிமன்றில் முற்படுத்திய போது ஏழு நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.