
கல்விப்பிரச்சினை சம்பந்தமாக ஆளுனருடன் இம்ரான் எம்.பி சந்திப்பு
-கிண்ணியா நிருபர்-
கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, கல்விப்பிரச்சினைகள் சம்பந்தமாகவும் மற்றும் விரைவில் வழங்கப்படவுள்ள கல்வியல் கல்லூரி ஆசிரியர் நியமனங்கள் சம்பந்தமாகவும் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சந்தித்து கலந்துரையாடினார்.
முக்கியமாக புதிதாக நியமனம் பெறும் கல்வியற் கல்லூரி ஆசிரியர்களை வெளிமாகாணத்திற்கு நியமனம் செய்யாமை உள்ளிட்ட விடயங்களை தெளிவுபடுத்தி ஆளுனரிடம் தெரிவித்தார்.
