கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் அதிகரித்தது சித்தி விகிதம்
-மட்டக்களப்பு நிருபர்-
2023ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியிலிருந்து தோற்றிய 113 மாணவிகளில் 105 மாணவிகள் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் சித்தி சத வீதம் 92.1 வீதமாகும். சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 3.1 வீதம் உயர்ச்சி என கல்லூரி அதிபர் திருமதி நவகீத்தா தர்மசீலன் “மின்னல் செய்திச்சேவை” க்குத் தெரிவித்தார்.
இவர்களில் நொச்சிமுனையைச் சேர்ந்த ஜெயக்குமார் ஷஸ்மித்தா “9ஏ” சித்தி பெற்றுள்ளார்.
இவரைப் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் மனதார வாழ்த்துகின்றனர்.