கல்முனை – காரைதீவு பகுதிகளில் மீன்பிடி மந்த நிலையில்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை – காரைதீவு பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள கரைவலை மீன்பிடியாளர்கள் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த பிரதேசத்திற்கு ஏனைய மாவட்டங்களில் இருந்து குளிரூட்டப்பட்ட வாகனம் மூலம் வரும் மீன்கள் அப்பகுதியில் உள்ள சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதால் அவற்றுக்கான விலைகள் அதிகமாக காணப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது நிலவி வரும் சீரற்ற கால நிலையே இதற்கு பிரதான காரணமாக காணப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்