கல்முனையில் மனைவியை தாக்கிய கணவன் தலைமறைவு

அம்பாறை மாவட்டம் கல்முனையிலுள்ள கடற்கரைப்பள்ளி வாசல் அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மனைவியை தாக்கிவிட்டு கணவன் தலைமறைவாகிய சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் சுமார் 38 வயதுடைய நிந்தவூர் பகுதியை சேர்ந்த பெண்ணே பாதிக்கப்பட்டுள்ளார்.

தம்பதிகள் இடையே கருத்து முரண்பாடு காரணமாக தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் பாதிக்கப்பட்ட மனைவி கணவன் மீது முறைப்பாடு வழங்கியுள்ளார். இந்த முறைப்பாட்டிற்கமைய பெண்கள் சிறுவர் முறைப்பாட்டு பிரிவு பொலிஸ் குழுவினர் தேடுதல் மேற்கொண்டு தலைமைறைவாகியுள்ள குடும்பஸ்தரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.