கலைமலர் சஞ்சிகை வெளியீட்டு விழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கலைமலர் சஞ்சிகை வெளியீட்டு விழா நேற்று புதன்கிழமை காலை கலாசாலை ரதிலஷ்மி மண்டபத்தில் நடைபெற்றது.

அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராசா கலந்துகொண்டு சஞ்சிகையினை வெளியிட்டு வைத்தார்.

சஞ்சிகையின் முதல் பிரதியை கலாசாலையின் முன்னாள் அதிபர் வீ.கருணலிங்கம் பெற்றுக்கொண்டார்.

கலைமலர் சஞ்சிகையின் பதிப்பாசிரியரும் விரிவுரையாளருமாகிய வே.சேந்தன் பதிப்பாசிரியர் உரை ஆற்றினார்.

கலாசாலையின் பிரதி அதிபர் க.செந்தில்குமரன் நன்றியுரை ஆற்றினார். ஆங்கில நெறி ஆசிரிய மாணவி தர்மினி சம்பத்குமார் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்

இந்நிகழ்வில் முன்னாள் உபஅதிபர் சத்தியா ரஞ்சிற், முன்னாள் விரிவுரையாளர்களான வ.சி.குணசீலன், சரா புவனேஸ்வரன், மு.ஜெயகுமாரி மற்றும் முன்னாள் ஆசிரிய மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

102 வருட கலாசாலை பாரம்பரியத்தில் இது 49 ஆவது சஞ்சிகை ஆகும்.

240 பக்கங்களுடன் இச் சஞ்சிகை வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.