கலைஞர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு

 

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கலைஞர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதரினால் பிரதேச செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

அந்தவகையில் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த கலைஞர்களான எம்.ஏ.றபாய்தீன், எம்.எச்.எம்.அமிர் அலி, ஏ.எல்.எம்.சித்திக் மற்றும் ஏ.எம்.அப்துல் காதர் ஆகிய கலைஞர்களுக்கு பிரதேச செயலாளரினால் அடையாள அட்டை வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எம்.ஏ.சீ.ஜெய்னுலாப்தீன், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான யோ.தனுசியா, தனுசாந் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக பதில் கடமை கலாசார உத்தியோகத்தர் எஸ்.ஏ.எம்.நளீம், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் வீ.சிந்து உஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்