கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மாவிற்கு தேசமானிய அபிமானிய விருது

காலி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ சக்தி ஆன்மீக இந்து சம்மேளனம் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பல சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கு கௌரவம் சேர்க்கப்படும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, தேசமானிய, அபிமானிய விருது முன்னாள் பிரதமரின் இந்த விவகாரங்களுக்கான இணைப்பாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மாவிற்கு, புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது

இந்நிகழ்வில், புத்தசாசன மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, தேசிய மக்கள் சக்தியின் அரசியல் ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், காலி மாநகர முதல்வர் மற்றும் பிரதமரின் முன்னாள் இந்து விவகார இனைப்பாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் கலந்து சிறப்பித்தனர் .