கரும்பு பயன்கள்
💦கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து, காசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், ஸிங்க்இ தையாமின், ரிபோபிளவின், புரதம் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன. கரும்பு இல்லாமல் பொங்கல் பண்டிகையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. தித்திக்கும் கரும்பு போல் வாழ்க்கையும் இன்பமாக அமைய வேண்டும் என்பதன் குறியீடுதான் கரும்பு
கரும்பு பயன்கள்
- கரும்பில் கால்சியம், மெக்னீசியம் சத்துக்கள் நிறைவாக இருப்பதால் பற்கள் மற்ற்ய்ம் எலும்புகளுக்கு வலிமை கிடைக்கிறது.
- கரும்பில் அதிகமாக பொட்டாசியம் இருப்பதால் மன அழுத்தத்தை ஊக்குவிக்கும் ஹார்மோன் சுரப்பு கடுப்படுத்தப்படுகிறது. அதுமட்டுமன்றி கரும்பை கடித்து மெல்லும்போது ஸ்ட்ரெஸ் பஸ்ட்ராகவும் இருக்கும் என்பதால் உங்கள் மன அழுத்தம் தானாக பறந்து போகும்.
- கரும்பு அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஃபிளவனோய்டுகள் இருப்பதால் புற்றுநோய் செல்களை ஆரம்பத்திலேயே எதிர்த்துப் போராட உதவுகிறது.
- கரும்பில் பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவில் சோடியம் இருக்கிறது. எனவே இது சிறுநீரகத்தில் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. எனவே சிறுநீரகப் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
- கரும்பில் அதிகமாக எலக்ட்ரோலைட்ஸ் இருப்பதால் கல்லீரல் ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது.
- கரும்பில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக இருப்பதால் சருமத்தின் ஆரோக்கியத்தை தக்க வைக்க உதவுகிறது. இதனால் சருமச் சுருக்கங்கள், சரும பாதிப்புகள் இன்றி வயதான தோற்றத்தையும் தாமதப்படுத்துகிறது.
- கரும்பில் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்திக்கு வலு கிடைக்கிறது. எனவே நோய் தொற்றுகளிலிருந்து தற்காத்துக்கொள்ள கரும்பும் நல்ல மருந்து.
- கரும்பு நார்ச்சத்து நிறைந்த சுவை என்பதால் உண்ணும் உணவுகள் சீராக செரிமானித்து தேவையற்ற கொழுப்பு சேர்க்கையை தடுக்கிறது. எனவே உடல் எடையும் கூடாது. ஏறிய உடல் எடையை குறைக்கவும் கரும்பு உதவுகிறது.
- கரும்பில் பொட்டாசியம் சத்து நிறைவாக இருப்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே உங்களுக்கு கரும்பு பிடிக்கும் எனில் தினம் ஒன்று என சாப்பிடுங்கள். இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம்.
- ஒரு டம்ளர் கரும்பு சாற்றில் சிறிதளவு சுண்ணாம்பு மற்றும் கருப்பு உப்பு சேர்த்து பருக வேண்டும். இவ்வாறு பருகி வந்தால் தொண்டையில் இருக்கும் கிருமிகளை அழித்து தொண்டை புண் குணமாக உதவும்.
- செரிமான பிரச்சனை இருந்தால் கரும்பு சாறு குடிப்பது நல்லது. ஏனெனில் கரும்பு சாறில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிற்றில் செரிமான சுரப்பிகளை சுரக்க செய்து, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- மூளை ஆரோக்கியமாக இருப்பது அவசியம். நாம் கரும்பு சாற்றை அருந்துவதால் மூளையின் செயல்பாடு அதிகரித்து மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
கரும்பு பயன்கள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்