ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நடத்திய புதிய ஆய்வில், கரப்பான் பூச்சிகளை “பாராபோர்க்ஸ்” (Paraborgs) எனப்படும் சைபோர்க் (Cyborg) உயிரினங்களாக மாற்றியுள்ளனர். இவற்றின் முதுகில் கேமராவும், சிறிய மருந்து ஊசி கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.
இடிந்து விழுந்த கட்டிடங்கள், குகைகள் போன்ற மனிதர்களால் நேரடியாக செல்ல முடியாத ஆபத்தான இடங்களில் சிக்கிக் கொண்ட பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, அவசர மருத்துவ ஊசியை செலுத்தும் திறன் இந்த பூச்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய கரப்பான் பூச்சி இனமான “நார்த் குயின்ஸ்லாந்து ராட்சத தரை கரப்பான்” (North Queensland giant burrowing cockroach) இதற்காகப் பயன்படுத்தப்பட்டது.
சோதனைகளில் 95 சதவீத வெற்றி விகிதத்துடன் ஊசி செலுத்தும் பணியை இப்பூச்சிகள் நிறைவேற்றியுள்ளன. இயற்கை பேரிடர் மீட்பு பணிகளில் எதிர்காலத்தில் இவை பெரும் பங்காற்றும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.









