-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் கற்கோவளம் பகுதியில் பாதுகாப்பு கம்பி வலைகள் இடப்பட்டுள்ள பொதுக் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தாயான விமலன் சிந்து (வயது 42) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது கம்பி வலையால் மூடிய கிணறு இருந்த பகுதியில் தொலைபேசி சத்தம் ஒலித்தது.
அதனைத்தொடர்ந்து காணாமல் போன பெண்ணின் மகன் கிணற்றை எட்டிப்பார்த்த போது கிணற்றிற்குள் தாயாரின் சடலம் கிடப்பதை அவதானித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பருத்தித்துறை பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
