கனடாவில் வேலைக்காக நீண்ட வரிசை! (வீடியோ)
கனடாவில் சாதாரண தொழிலுக்கு கூட, நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான பேர் காத்திருக்கும் காணொளியொன்றை அங்குள்ள இந்தியப் பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இது கனடாவில் தொழில் நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் தொழிலின்மையை எடுத்துக்காட்டுகின்றது.
குறித்த பெண் காணொளியில் ஒரு இடத்தில் பயிற்சி வேலைவாய்ப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அந்த வேலை வாய்ப்பு 5-6 பேருக்கு மட்டும் வழங்கப்படவுள்ளதாகவும் ஆனால் பாரியதொரு நீண்ட வரிசையில் இந்த வேலைக்காக பலர் காத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.
அத்துடன் வெளிநாட்டு வாழ்க்கை என்பது பலருக்கும் கனவாகவே இருக்கும். ஆனால், சில நேரங்களில் அது நினைத்துப்பார்க்க முடியாத அளவில் ஏமாற்றங்களை கொடுக்கும் என குறித்த பெண் அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.