கனடாவில் கொல்லப்பட்ட 6 இலங்கையர்கள்: 19 வயது இளைஞன் கைது
கனடாவில், இலங்கையில் இருந்து புதிதாக குடிபெயர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஒட்டாவா புறநகர் பகுதியான பார்ஹேவனில் வீட்டிலிருந்து தாயும் அவரது நான்கு பிள்ளைகளும் அந்த குடும்பத்துடன் வசித்து வந்த ஒருவருமே பொலிஸாரால் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதன்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் தர்ஷனி டிலந்திகா ஏக்கநாயக்க (வயது – 35), மகன் இனுக விக்ரமசிங்க (வயது – 7), மகள்களான அஷ்வினி விக்ரமசிங்க (வயது – 4), ரினியானா விக்ரமசிங்க (வயது – 2) மற்றும் கெல்லி விக்ரமசிங்க (வயது – 2 மாதம்) ஆகியோரும் காமினி அமரகோன் (வயது – 40) என்ற உறவினருமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த பிள்ளைகளின் தந்தையான ஜீ காமினி அமரகோன் (வயது – 40) சம்பவத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் கல்வி கற்கும் ஃபேப்ரியோ டி சொய்சா (வயது – 19) என்பவரே இந்த கொலைகளை செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கூரிய ஆயுதமொன்றை பயன்படுத்தி கொலைகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்