
கனடாவில் இலங்கை சிறுவனை காணவில்லை
கனடாவின் தெற்கு வின்னிபேர்க் என்ற பிரதேசத்தில் இருந்து இலங்கை சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இனுக குணதிலக்க (வயது – 15 ) என்ற சிறுவனே இவ்வாறு காணமல் போயுள்ளார்.
கடந்த 24ஆம் திகதி வகுப்புக்கு சென்று அங்கிருந்து வெளியேறிய பின்னரே அவரை காணாமல் போயுள்ளதுடன் இறுதியாக அன்று காலை ஃபோர்ட் ரிச்மண்ட் பகுதியில் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சிறுவனை தேடும் பணிகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதுடன் தகவல் தெரிந்தவர்கள் வின்னிபெக் பொலிஸ் சேவையின் காணாமல் போனோர் பிரிவுக்கு அழைப்பை ஏற்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
