மூதூர் நிருபர்
திருகோணமலை -கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக்குளம் பகுதியில், நேற்று செவ்வாய்க்கிழமை நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெவசிறிகம பகுதியைச் சேர்ந்த கந்தே கெதர சமிந்த (வயது 40 )என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இந்தத் துப்பாக்கியை மான் வேட்டைக்குப் பயன்படுத்தி வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சின்னக்குளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியும், ஒரு தோட்டாவுமே கைப்பற்றப்பட்டது.
கந்தளாய் தலைமை பொலிஸ் பரிசோதகர் எல்.எம். சஞ்சீவ பண்டாரவின் அறிவுறுத்தலின் பேரில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.