கந்தளாயில் வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு

-மூதூர் நிருபர்-

கந்தளாய் பகுதியில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையிலுள்ள – சூரியபுர பகுதியில் இருந்து கந்தளாய் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் கந்தளாயிலிருந்து சேருநுவர நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் நேற்று செவ்வாய் கிழமை மாலை மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கந்தளாய் ரஜஎல பகுதியைச் சேர்ந்த ஜி.ஜி.ஆரியபால (வயது – 60) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

இவர் தனது வயலில் வேலை செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சூரியபுர 11 போஸ்ட் அருகே விபத்துக்குள்ளானார்.

டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலதிக விசாரணைகள் சூரியபுர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்