கந்தகாட்டிலிருந்து தப்பிய 15 பேர் இன்னும் திரும்பவில்லை

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பி சென்ற 15 கைதிகள் இதுவரை சரணடையவில்லையெனவும் இதன் செயற்பாடுகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகள் குழுவிற்குள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் கைதிகள் குழுவொன்று காயமடைந்துள்ளதுடன் மற்றுமொரு குழுவினர் தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 05 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்