Last updated on November 8th, 2022 at 05:54 pm

கண்ணீருடன் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் ரொஜர் பெடரர் | Minnal 24 News %

கண்ணீருடன் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் ரொஜர் பெடரர்

சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர், டென்னிஸ் போட்டிகளுக்கு விடைகொடுத்தார்.

ரொஜர் பெடரர் அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை லண்டனில் ஆரம்பித்த லேவர் கிண்ணத் தொடரில் ஐரோப்பிய அணியும், உலக அணியும் மோதிய போட்டியில், தனது கடைசி ஆட்டத்தில் ரொஜர் பெடரர் பங்கேற்றார்.

ஐரோப்பிய அணியில் இடம்பெற்றுள்ள ரொஜர் பெடரர், இரட்டையர் பிரிவில் மற்றும் ஒரு முன்னணி வீரரான ரபேல் நடாலுடன் இணைந்து அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ – ஜெக் சாக் இணையுடன் போட்டியிட்டனர்

இந்த போட்டியில் ரொஜர் பெடரர்- ரபேல் நடால் இணை 6-4, 6-7 (2-7), 9-11 என்ற செட் கணக்கில் டியாபோ – ஜெக்சாக் இணையிடம் தோல்வியைத் தழுவினர்.

இதையடுத்து டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி போட்டியில் தோல்வியடைந்த ரொஜர் பெடரர் கண்ணீருடன் விடை பெற்றார்.

ரொஜர் பெடரர், நடால் மற்றும் பிற வீரர்களைக் கட்டியணைத்து அழுதார்.