கண்டி – பேராதனை இடையிலான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு

கண்டி, பேராதனை புகையிரத நிலையங்களுக்கிடையே தடைப்பட்டிருந்த புகையிரத சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

கொழும்பு – கண்டி ரயில் பாதையில் கண்டி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள வில்லியம் கொபல்லாவ மாவத்தையில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் ரயில் பாதையில் திடீரென ஏற்பட்ட தாழிறக்கம் காரணமாக, கண்டி – பேராதனைக்கு இடையே தற்காலிகமாக புகையிரத சேவை இடை நிறுத்தப்பட்டிருந்து. தற்போது புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

மேலும், கண்டி ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் திட்டமிட்டபடி இயங்கும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.