கண்டி திகன இரஜவலை இந்து தேசிய கல்லூரியின் சித்திர கண்காட்சியும் விற்பனைக்கூடமும்

 

கண்டி மாவட்ட தமிழ் பாடசாலைகளில் தனக்கென ஒரு தன்னிடத்தை பெற்று விளங்கும் இரஜவலை இந்து தேசிய கல்லூரியின் மாணவர்களால் “துகிலிகை’ எனும் தொனிப்பொருளில் சித்திர கண்காட்சியும் விற்பனைக்கூடமும் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வு அழகியல் பாடத்திட்டத்திற்கு பொறுப்பான v வித்தியா ஆசிரியரின் வழிகாட்டலில் நடைப்பெற்றது.

இதன் போது மாணவர்களின் கை வண்ணங்களில் நூற்றுக்கு மேற்பட்ட ஓவியங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் அயல் பாடசாலைகளும், பெற்றார்களும், பழைய மாணவர்களும் பார்த்து ரசித்திருந்தனர்.

மேலும் ஏராளமான ஓவியங்களை ஆசிரியர்கள் மட்டுமின்றி பழைய மாணவர்களும், நலன் விரும்பிகளும் கொள்வனவு செய்திருந்தமை மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

குறிப்பாக இவ் ஓவிய கண்காட்சியில் தரம் 6 முதல் தரம் 13 வரையிலான வகுப்புக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களுடைய திறமையை வெளிகாட்டியிருந்தமை குறிப்பிடதக்கது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வத்தேகம கல்வி வலையத்தின் பணிப்பாளர் திருமதி தராங்கா குணரத்ன மற்றும் ஜனாப் ஐ ஹாசிம் ஆகியோர்; கலந்து சிறப்பித்திருந்தனர்.

இதன் போது சித்திர கண்காட்சி நிகழ்வில் தரம் 13 இல் கல்வி பயிலும் உயர்தர பிரிவு (2023 AL BATCH) மாணவர்களால் தீட்டப்பட்ட பெறுமதிமிக்க. ஓவியம் ஒன்றினை பாடசாலையின் அதிபருக்கு அன்பளிக்கப்பட்டது.