கண்டி-கொழும்பு வீதியில் விபத்து

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் ரதாவடுன்ன பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கெப்ரக வாகனமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

விபத்தில் உயிரிழந்தவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த (வயது 81)முதியவர் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.