கண்டி – கொழும்பு வீதியில் பாரிய விபத்து: ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் திட்டவெல்கட பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கம்பளை – மரியாவத்தை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய வேன் சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

திட்டவெல்கட பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வேனை முந்திச் செல்ல முற்பட்ட போது மேலும் மூன்று வேன்களுடன் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்இ நால்வர் காயமடைந்துள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்தவர்கள் வறக்காப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் ருமேனிய நாட்டவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தின் சாரதி பொலிஸ் பாதுகாப்பில் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்