கணவர் மீதான காதலை வெளிப்படுத்த பெண் செய்த செயல் !
தனது வாழ்க்கை துணையிடம் காதலை வெளிப்படுத்த பலரும் பல்வேறு விதமான முயற்சிகளை செய்வதை பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம். இங்கு ஒரு பெண் தனது கணவர் மீதான காதலை வெளிப்படுத்த அவர் செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் இந்தியா கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள “கிங் மேகர் டாட்டூ ஸ்டுடியோ” என்ற பச்சை குத்தும் பார்லருக்கு பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் தனது கணவரின் பெயரை நான் டாட்டூவாக பச்சைக்குத்திக் கொள்ள விரும்புகிறேன் என்றுள்ளார்.
பொதுவாக கைகள், கால்கள், முதுகு, மார்பு போன்ற உடல் பகுதிகளில் தானே பச்சைக் குத்திக்கொள்வர்கள். இந்த பெண்ணோ, தனது கணவரின் பெயரை நெற்றியில் பச்சைக் குத்திக்கொள்ள விரும்பியிருக்கிறார். பச்சைகுத்தும் பார்லர் ஊழியர் ஒரு பேப்பரில் அந்த பெண்ணின் கணவரின் பெயரான சதீஷ் என்பதை எழுதி இந்த எழுத்து வடிவம் சரியா எனக் கேட்க பெண் சம்மதம் தெரிவித்தார்.
பின்னர் ஊசியை வைத்து பெண்ணுக்கு கணவரின் பெயரான சதீஷ் என்பதை நெற்றியில் டாட்டூவாக பச்சை குத்துகிறார்கள். இந்த வீடியோவை அந்த அந்த டாட்டூ பார்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில்இ இது தற்போது வைரலாகி வருகிறது. 1.25 கோடி பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். 2.6 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்