
கணவனை கொலை செய்ய 2000 ரூபா வாடகைக்கு ஆள் பிடித்த மனைவி
தனது கணவனை கொலைசெய்துவிட்டு கணவனின் நண்பனை திருமணம் செய்து வாழ்வதற்காக நண்பனுடன் சேர்ந்து கணவனை கொலைசெய்ய திட்டம் தீட்டிய மனைவி மற்றும் நண்பன் மேலும் கொலைசெய்ய பணம் கொடுத்து அழைத்த இரண்டு பேரையும் ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கணவர் கால்நடை பண்ணை மற்றும் விவசாயியாக உள்ளார் இவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சமயம் மனைவியும், நண்பனும் மற்றும் பணம் கொடுத்து வாடகைக்கு அழைத்தவர்கள் இணைந்து கொலை செய்ய முயன்றதுடன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவரின் படுக்கைக்குச் சென்று கழுத்தை இறுகப் பற்றிக் கொண்டு வெட்டியதாக விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்போது பாதிக்கப்பட்ட நபருக்கு தொண்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது அலறல் சத்தம் கேட்டது, இதன்போது ஏற்கனவே வீட்டின் மற்றொரு அறையில் உறங்கிய உறவினர் உரத்த குரலில் கூச்சலிட்டதையடுத்து, குறித்த நபரை ஆனமடுவ வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
2000 ரூபாவுக்கு கொலைசெய்ய வாடகைக்கு ஆள் பிடிக்கப்பட்டுள்ளதுடன், வெலிமடை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட குறித்த பெண்ணும் அவரது பிள்ளைகளும் வெலிமடையில் உள்ள பெற்றோரை பார்க்கச் சென்ற வேளையில் குறித்த நபரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
