கணவனின் பணத்தை பொழுதுபோக்காக செலவழிக்கும் மனைவி : கணவர்களே உஷார்!
இன்று நம்மில் பலர் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கு ஒரு பெண் தன்னுடைய சொகுசான வாழ்க்கை குறித்தும், ஆடம்பர சுற்றுலா கொண்டாட்டங்களையும், தான் சென்ற ஆடம்பர ஷாப்பிங் மால்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அடிக்கடி சமூக ஊடகத்தில் பகிர்ந்து வருகிறார்.
ஐந்து நாட்கள் நன்றாக வேலை செய்து விட்டு வாரயிறுதி நாட்களில் நம் தேவைக்காக சில பொருட்களை கடைகளில் வாங்குவோம். சம்பள நாள் என்றால் கொஞ்சம் கூடுதலாக செலவு செய்வோம். இப்படித்தான் பெரும்பாலானோர் இருக்கிறார்கள். ஆனால் துபாயில் ஒரு பெண் செய்த காரியத்தைக் கேட்டால் நீங்கள் வாயடைத்துப் போவீர்கள். ஆமாம், ஒரே நாளில் 70 லட்ச ரூபாய்க்கும் மேல் ஷாப்பிங் செய்துள்ளார் அந்த ‘ஆடம்பரப்’ பெண்மணி.
இவர் காலையில் எழுந்ததும், இன்று எப்படியெல்லாம் தன்னுடைய கணவரின் பணத்தை செலவு செய்யலாம் என யோசிப்பார் போல. ஷாப்பிங் செல்வதுதான் அவரது பொழுதுபோக்கு. ஒருநாள் ஷாப்பிங் சென்றால் எப்படியும் குறைந்தது மூன்று லட்சம் முதல் 70 லட்சம் வரை செலவு செய்கிறார்.
துபாயின் பணக்கார பெண்களில் தானும் ஒருவர் எனவும் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தன்னை இலட்சக்கணக்கான மக்கள் ஃபாலோ செய்கிறார்கள் எனவும் கூறுகிறார். கணவனும் மனைவியும் ஒரே மாதிரி கார்களை வைத்துள்ளார்கள். அதோடு பிர்கின் பேக் மற்றும் இரு கார்களை தன்னுடைய மனைவிக்கு பரிசாக கொடுத்துள்ளார் இவரின் கணவர்.
உலகின் பல நாடுகளுக்குச் சென்றுள்ள இப்பெண், ஒவ்வொரு முறை சுற்றுலா செல்வதற்கும் 14 முதல் 15 லட்சம் வரை செலவு செய்துள்ளார். சமீபத்தில் கூட மாலைதீவிற்கு சென்றுள்ளார். இதற்கு இவர் எவ்வுளவு செலவு செய்தார் தெரியுமா? 12.78 லட்சம். நம்மை பொறாமைப்பட வைக்கிறார் இந்த உலகம் சுற்றும் பெண்.
தங்களது ஆடம்பர வாழ்க்கை முறை குறித்து வெளிப்படையாக பேசுகிறார் இவர். “எனக்கு கை நகங்களை அழகுபடுத்துவது என்றால் ரொம்ப பிடிக்கும். இதற்கு மட்டுமே 63,000 செலவு செய்துள்ளேன். எப்போதும் ஆச்சர்யங்களை விரும்புபவள் நான். 96,000 ரூபாய் செலவழித்து, எனக்காக ஒரு ரெஸ்டாரண்டையே புக் செய்தார் என்னுடைய கணவர். அதுமட்டுமல்ல, அன்று இரவு டின்னருக்கு உடுத்த வேண்டிய ஆடையையும் அனுப்பி வைத்திருந்தார். எனக்கு இது எவ்வுளவு பெரிய ஆச்சர்யம் தெரியுமா!. இன்னொன்றையும் சொல்ல வேண்டும். தினசரி இரவு படுப்பதற்கு முன், நான் எதிர்பார்க்காத பரிசு ஒன்றை எனக்கு தந்துவிட்டுதான் அவர் தூங்கச் செல்வார்” எனக் கூறி நம்மை திக்குமுக்காட வைக்கிறார்.