கட்டு துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் மரணம்

-பதுளை நிருபர்-

பதுளையில் உள்ள காட்டு பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு கட்டு துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அளுத்தாராம 7ஆம் கட்டை பகுதியை சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் சாமிகம மில்லத்தேவ பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக காட்டுப்பகுதி வழியாக சென்ற போது துப்பாக்கி வெடித்ததில் இடது முழங்காலுக்கு கீழ் பலத்த சேதமடைந்து மயங்கிய நிலையில் மஹியங்கனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

பதுளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த, ஆலோசனையின் கிராதுருகொட்டை பொலிஸார் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்