கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மூன்று பெண்கள் கைது
தங்கம், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி உபகரணங்களை இலங்கைக்கு கடத்த முற்பட்ட மூன்று பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பை அடுத்து நேற்று வியாழக்கிழமை அதிகாலை இலங்கை வந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து தலா 719.940 கிராம் எடையுடைய 03 தங்கச் சங்கிலிகள், 163 கைத்தொலைபேசிகள், 695 கையடக்கத் தொலைபேசிகள், 414 கையடக்க தொலைபேசி சார்ஜர்கள் மற்றும் 810 கையடக்கத் தொலைபேசி பேட்டரிகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 35, 40 மற்றும் 48 வயதுடைய மூன்று பெண்களும் கிரியுல்ல, மாரவில மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் இலங்கை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.