கடும் வறட்சியால் சிரமப்படும் போரதீவுபற்று மக்கள் : குடிநீருக்காக மாதாந்தம் 232000 ரூபா வரை ஒதுக்கீடு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேசத்தில் தற்போது அதிக வரட்சி நிலைமை காணப்பட்டு வருகின்றனது, இதனால் அப்பகுதியிலுள்ள குளங்கள் முற்றாக வற்றியுள்ளதுடன், மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகின்றன.

இதேவேளை, குழாய் மூலமான குடிநீர் வசதி உள்ள கிராமங்களிலும், சீரான முறையில் மக்களுக்கு நீர் கிடைப்பதில்லை, எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் போரதீவுப்பற்று பிரதே சபையின் தவிசாளர் விமநலாதன் மதிமேனன் தெரிவிக்கையில், போரதீவுபற்று பிரதேச சபையினால் மாதத்திற்கு இரண்டு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் ரூபா நிதி, குடிநீருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.