கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வனவிலங்குகளுக்கு நீர் வழங்கும் நடவடிக்கையை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரச நிறுவனங்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள புத்தங்கல மற்றும் கல்ஓயா பள்ளத்தாக்கு வடகிழக்கு பகுதிகளில் வறண்டு போன குளங்கள் மற்றும் நீர்த்தடங்களை நீர்ப்பவுசர்கள் மூலம் நீர் நிரப்பும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. நீண்டகால வறட்சியால் அப்பகுதியிலுள்ள பல இயற்கை நீராதாரங்கள் வறண்டுள்ளதால் வனவிலங்குகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன.
இதேபோன்று லாகுகல தேசிய பூங்கா உள்ளிட்ட பல தேசிய பூங்காக்களிலும் வனவிலங்குகளுக்கான நீர் விநியோக நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.










